07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 11, 2015

வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள்

அன்பின் வணக்கம்.

ஆன்மீகம் என்பதை விட்டு கலை என்கிற நோக்கில் பார்த்தாலும் ஸ்ரீரங்கம் கோவில் நம் கண்ணுக்கு விருந்தாகவே அமைகிறது. இன்றும் பல லட்சம் மக்கள் ஆர்வமாய் வந்து போகிற ‘பெரிய கோவில்’ என்றே அழைக்கப்படுகிற ஸ்ரீரங்கம் கோவிலினுள்ளே சிற்பக் கலைக்கு சாட்சியாய் சேஷராயர் மண்டபத் தூண்கள்.


ஒற்றைக்கல்.. எத்தனை உயர.. அகலம்.. எந்த ஒட்டு வேலையும் இல்லை. அதில் வடிக்கப்பட்ட சிற்பம்.. குதிரை வீரன்.. எத்தனை நுணுக்கங்கள்.. அழகிய வேலைப்பாடுகள். பிரமிப்பில் வார்த்தைகள் வராது நேரில் பார்த்தால்.

இந்தப் பிராகாரத்தில் தான் பார்த்தசாரதி சந்நிதியும் உள்ளது. கண்ணன் தேரோட்டியாய்.. அர்ஜுனனுக்கு. தேரில் கண்ணன்.. எதிரே அர்ஜுனன்.. கண்ணனின் வலது கையில் சங்கு.. இடது கையில் சக்கரம் என்று இடம் மாறிய உற்சவர் விக்ரஹம். 

பொதுவாய் விஷ்ணுவின் வலது கையில் ஸ்ரீசுதர்சனம் என்கிற சக்கரம்.. இடது கையில் பாஞ்சசந்யம் என்கிற சங்கு.. இங்கோ ஏன் இடம் மாறியது.. அழகான விளக்கம்..

கண்ணன் இப்போது தேரோட்டி.. வலது கையில் சங்கிருந்தால் தான் யுத்த பூமியில் முழங்க இயலும்.

வைணவர்களுக்கான சமாச்ரயணம் என்கிற முத்திரை பதிக்கும் சடங்கிற்கு  இடம் மாறியிருந்தால் தான் வலது தோளில் சக்கரக் குறியும் இடது தோளில் சங்கையும் பதிக்க முடியும். கண்ணன் ஆசார்யன் அல்லவா.

இந்த சந்நிதிக்கு நேர் எதிரே ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி. கண்ணன் இடம் மாற்றி வைத்ததால் எதிரே இருக்கும் சுதர்சனர் தம் உக்கிரம் தணிந்து கட்டுப்பட்டு இருப்பதாகவும் ஐதீகம்.

கோவில்களோ.. வெளி இடங்களோ.. எங்கே பயணம் மேற்கொண்டாலும் அந்த இடத்திற்கான சுவாரசியமான தகவல்களைக் கேட்டறிந்து பார்வையிடுவது கூடுதல் இன்பம் என்கிற நோக்கில்தான் சில தகவல்களை உங்களோடு பகிர்கிறேன்.

இனி இன்றைய பதிவர்கள்..



சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்  சுப்பு தாத்தா முந்தைய வலைச்சர பதிவிற்கு பின்னூட்டமிட.. அதற்கு பதில் தர.. அந்த மூன்று வார்த்தைகள் எப்படி ஒரு அழகான பதிவாகவே மாறி விட்டது.. பாருங்கள்.  பதிவர்களில் சுவாரசியமாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இளைஞருக்கு பல்லாண்டு பாடலாம்.





திண்டுக்கல் தனபாலன் அவர்களைத் தெரியாத பதிவர் இருக்க முடியாது. வலைச்சரத்தில் என்னைப் பற்றி அந்த வார ஆசிரியர் குறிப்பிட்டிருந்தால் என் வலைப்பூவிற்கு வந்து தகவல் தெரிவித்துப் போகும் பண்பாளர். எனக்கு மட்டுமல்ல.. இப்படி எல்லாப் பதிவர்களுக்கும் இனியவர்.  சுறுசுறுப்பாய் இயங்கும் இவர் என்றும் பதினாறாய் இருக்க பிரார்த்தனை.


வல்லிசிம்ஹன் அவர்களும் சுறுசுறுப்பாய் பதிவிடும் பதிவர்களில் ஒருவர்.
கண்டது.. கேட்டது.. நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது என்கிற முகப்பு வரியுடன் அவர் தளத்தில் பல சுவாரசியமான பதிவுகளைப் படித்து ரசிக்கலாம்.

நாம் மற்றவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம்  இட்டால் மட்டுமே அவர்கள் நம் பதிவைப் படிப்பார்களா.

எழுத்தின் தரம் எப்படி  நிர்ணயிக்கப் படுகிறது.
சென்சேஷன்?
சுவை?

இன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இப்படி ஒரு பதிவிட்டிருக்கிறார். இது உண்மைதானா.. உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.

என்னைப் பொறுத்தவ்ரை என் கண்ணில் படுகிற பதிவுகளை தவறாமல் படித்து விடுவேன். ஆனால் எனக்குப் பின்னூட்டமிடுகிறவர்.. அப்போதுதான் எனக்கு அறிமுகமாகிறவர் என்றால் உடனே ஆர்வமாய் போய் படிப்பேன். எனக்குத் தெரியாத எத்தனையோ பதிவர்களை நான் தெரிந்து கொள்ள இதுவும் ஒரு வகை யுக்திதான் என்பதே என் கருத்து.



நினைவின் விளிம்பில்  கவிநயாவின் வலைத்தளம். தமிழ் பிடிக்கும் படிப்பேன் எப்போதும்..எழுதுவேன்.. அப்பப்ப.. என்கிற அறிமுக வரி அவருக்கு

ஆன்மீக விருந்தளிக்கும் இவரது பதிவுகள் தமிழ் மணமும் பரப்புவதைக் காணலாம்.

கறந்து வெச்ச பாலு தாரேன்
கடைஞ் செடுத்த வெண்ணெ தாரேன்
கலந்து வெச்ச மோரு தாரேன்
கண்ணா ஓடி வா!
குளுகுளுன்னு தயிருந் தாரேன்
கண்ணா ஓடி வா!

பட்டுப் போல பாதம் வெச்சு
சிட்டுப் போல சிரிச்சுக் கிட்டு
தத்தித் தளர் நடை நடந்து
கண்ணா ஓடி வா!
தண்டை காலில் குலுங்கக் குலுங்க
கண்ணா ஓடி வா!

திராட்சக் கண்ணு மினுமினுங்க
கன்னக் குழி எனை விழுங்க
கனி வாயில் தே னொழுக
கண்ணா ஓடி வா!
கட்டி முத்தம் தாரேன் செல்லக்
கண்ணா ஓடி வா!

கால் வெரல சூப்ப வேணாம்
ஆல எலையில் படுக்க வேணாம்
அம்மா மடியில் படுத்துக்கலாம்
கண்ணா ஓடி வா!
ஆரிரரோ கேட்டு றங்க
கண்ணா ஓடி வா!


-கவிநயா

வாழ்த்துகள் கவிநயா !


இனி இன்றைய முகநூல் கவிஞர்..  திருமதி கல்பனா ரத்தன்



கிளையமர்ந்த வெயில் கீற்று 
பிடி தவறி விழுந்தது காற்றசைவில் 
இலைகளை அசைத்தசைத்து 
ஆதுரமாய் வருடுகிறது கிளை 
வெயிலுக்கும், நிழலுக்குமான வினோத நடனத்தை 
குறுங்கழுத்து சாய்த்து
ஓரக்கண்ணால் பார்க்கும் காக்கையின் நிழலை
கொத்திப் பசியாறுகிறது வெயில்.

நாளை சந்திப்போம்...

31 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. திருவரங்கக் கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  3. கோவில் விவரங்கள் ஒவ்வொன்னும் அருமையோ அருமை!

    எத்தனை முறை வந்து தரிசித்தாலும், இன்னும் இன்னும் என்றுதான் ஏக்கமா இருக்கு :-( திருப்தி இல்லாத ஜென்மமாப் போயிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. புனர் தர்சன ப்ராப்தி ரஸ்து

      Delete
    2. ரொம்ப சந்தோஷம். பெருமாளிடம் சொல்லி வையுங்கோ:-)

      Delete
  4. கவிநயா அவர்களின் வலைப்பதிவை அறிமுகப்படுத்தியது மனதை நெகிழச்செய்தது.

    எனக்குத் தெரிந்து கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு செவ்வாய் அன்றும் அன்னை புவனேஸ்வரி , தையல்நாயகி, மீனாக்ஷி, காமாக்ஷி, கருமாரி, விசாலாக்ஷி, என்று ஒவ்வொரு தேவியரின் அருள் வேண்டி எழுதும் இவரது கவிதைகள் ஒரு

    பக்திச் சுரங்கம். இவரது பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு வாரம் கூட இந்தப் பணியை செய்யாமல் இருந்தது இல்லை.

    கர்மணெதிகாரஸ்த நா பலேஷு என்று கண்ணன் சொன்னவாறு,

    இவர் தொடர்ந்து அன்னையின் அருள் வேண்டி எழுதும் பாடல்கள் யாவும் அந்த அன்னையின் அருளே.
    www.ammanpaattu.blogspot.com
    இவரே அந்த அன்னையின் வடிவமோ என்று நான் வியக்கும் நாட்களும் இருக்கின்றன. இவரது பாடல்களில் சுமார் 800 ஐ நான் மெட்டு அமைத்து பாடியதை என் சாதனை என சொல்ல மாட்டேன்.

    இறை பணியிலே என்னை ஈடு படுத்திய இவள் நான் என்னை முதன் முதலிலே தாத்தா என்று அன்புடன் அழைத்திட்ட அழகு,

    அதே பெயர் இன்று வலையிலே நிலைத்து விட்டது.

    இவர் வலைகள் மற்றும் இருக்கின்றன.
    www.muruganarul.blogspot.com
    www.kannansongs.blogspot.com
    www.kavinaya.blogspot.com

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    Rishaban sir !!
    It is so miraculous, that on the day you invited me in your reply, I learn from Madam Anuprem's blog, that is on 9th , there was a magnificent kumbabishekam for all the kalasams at the Srirangam Temple.
    One may say this is pure accidental coincidence.
    To me, you did not invite me, perhaps HE did it ,
    in your form .

    ReplyDelete
    Replies
    1. அவனன்றி ஓரணுவும் அசையாதல்லவா.. ரங்கனின் விளையாட்டு

      Delete
  5. வணக்கம்!?! அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி!!!!

    ReplyDelete
  6. நன்றி... மிக்க நன்றி...

    எழுத்தின் தரம் : நமது திருப்தியே முக்கியம்...

    மற்ற அறிமுகங்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க.. நன்றி

      Delete
  7. சங்கும் சக்கரமும் இடம் மாறியிருப்பதற்கான விளக்கம் அருமை!..

    அரங்கத்தின் ஒவ்வொரு அழகும் அற்புதமே!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  8. இன்றைய அறிமுகங்கள் தாத்தா மற்றும் நண்பரே டி.டி அவர்களுக்கும் ஏனைய பதிவர்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்

      Delete
  10. சங்கு சக்ர மாற்றத்துக்குச் சொன்ன விளக்கம் அருமை. பதிவர்கள் அனைவரும் தெரிந்தவர்களே! நன்கு அறிமுகம் ஆனவர்களும் கூட.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்..அவங்களைச் சொல்லாமல் இருக்கமுடியுமா..

      Delete
  11. சுப்பு அண்ணா பதிவைப் பார்த்துவிட்டு இன்று மற்ற பதிவுகளையும் அரங்க ருசியோடு படிக்க வந்தால் என் தளமும்
    அறிமுகமாகி இருக்கிறது .மிக நன்றி ரிஷபன் ஜி.
    ஸ்ரீ ஆண்டாளின் கண் பார்வை எங்கே செல்கிறது என்று நேற்றுப் படித்தேன். இன்று சுதர்சன ஆழ்வாரின் பெருமையும்
    அவரைத் தாங்கிய ரங்க நாயகி மணாளனின் பெருமையும் மனதை நிரப்புகின்றன.
    நீங்கள் எடுத்துச் சொன்ன பிறகு பதிவைப் போய் பார்க்கணும். மிக மிக நன்றி..

    ReplyDelete
    Replies
    1. அரங்கனின் கடைக்கண் பார்வையில் நாம் எப்போதும்

      Delete
  12. ஒவ்வொரு நாளும் தங்கள் கை வண்ணத்தில் விறுவிறுப்பாய் போய்க் கொண்டிருக்கிறது....வாழ்த்துகள்....இருந்தாலும் ஒரு சோகம் மனதை பிழிந்து கொண்டு இருக்கிறது....
    அது வேறு ஒன்றுமில்லை சார்...அது நம்ம ரிஷபனின் கை வண்ணத்தில் மிளிரும் வலைச்சரம் சட்டென முடிந்து விடப் போகிறதே என்று தான்!

    ReplyDelete
    Replies
    1. எதுவும் முடிவதில்லை.. இன்னொரு தேர்ந்த கரம் அதைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும்

      Delete
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. ஸ்ரீ ரங்கம் சேஷராயர் மண்டபச் சிற்பங்களைப்பார்த்து நான் வியந்ததுண்டு. ஆனால் நான் போயிருந்த சமயம் அதைச் சுற்றிலும் மரங்களும் கற்களுமாக சரியாகப் பராமரிக்கப் படாமல் இருந்தது வேதனை தந்தது. என் காமிராவில் அதைப்பதிவும் செய்து வைத்தேன் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இப்போது வந்து பாருங்கள்

      Delete
  15. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது